வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி48 ராக்கெட்
Published on

பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-ஆவது ராக்கெட்டான பி‌.எஸ்.எல்.வி. சி 48 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக ரீசாட் 2பிஆர் 1 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது. 628 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-ஆவது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி 48 என்ற ராக்கெட் மூலம் இன்று மாலை 3.25 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  

இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் வைத்து அனுப்பப்பட்டுள்ளன. விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களிலேயே பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட்டிலிருந்து ரீசாட் 2பிஆர் 1 செயற்கைக்கோள் பிரிந்து, பூமியிலிருந்து 576 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளிநாடுகளை சேர்ந்த 130 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்த 75 ஆவது ராக்கெட்டாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com