ஐ போனில் ஸ்மார்ட் பிரின்டர்

ஐ போனில் ஸ்மார்ட் பிரின்டர்
ஐ போனில் ஸ்மார்ட் பிரின்டர்
Published on

வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகில் அனைத்தும் கைக்கு அடக்கமாகவும் எளிதில் மற்ற இடங்களுக்கு செல்லக் கூடிய வகையிலும் ஸ்மார்ட்டான சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஐபோன் பிரின்டர் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக பிரின்ட் எடுக்க கம்யூட்டரைப் பயன்படுத்துவது வழக்கம். அதையும் சுருக்கி தற்போது நம் மொபைலிலே பிரின்ட் எடுக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐபோன் பிரின்டரை பயன்படுத்தி, இதன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை பிரின்ட் செய்துகொள்ள முடியும். இதில் மட்டுமின்றி ஏனைய ஐஓஎஸ் மொபைல்களிலும் இந்த பிரின்டரை இணைத்து பயன்படுத்த முடியும். 

எனினும் iPhone 7 Plus, iPhone 7, iPhone SE, iPhone 6s Plus, iPhone 6s, iPhone 6 Plus, iPhone 5s மற்றும் iPhone 5 என்பவற்றினை நேரடியாக இணைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் இப்பிரின்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை 150 யூரோ என கூறப்படுகிறது. ஐபோன் பிரின்டர் மூலம் ஐபோனில் போட்டோ எடுத்து அதனை உடனடியாக பிரின்ட் எடுத்து மகிழலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com