'பெண்மையை போற்றும் புதிய எமோஜிகள்' - கூகுள் அறிமுகம்

'பெண்மையை போற்றும் புதிய எமோஜிகள்' - கூகுள் அறிமுகம்
'பெண்மையை போற்றும் புதிய எமோஜிகள்' - கூகுள் அறிமுகம்
Published on

அனைத்து துறைகளிலும் வெற்றி பெறும் பெண்களின் ஆளுமையை போற்றும் வகையில் புதிய எமோஜிகளை கூகுள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

சிரிப்பது, அழுவது என்ற இரண்டு உணர்வுகளையும் தாண்டி காதல், கோபம், வருத்தம், குழப்பம் என அத்தனை உணர்ச்சிகளையும் ஸ்மைலிகள் என்னும் எமோஜிகள் வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில், பெண்களின் உரிமைக்கான குரலாகவும், வேலை என்பது பெண்களுக்கு அவசியம் என்பதை உணர்த்தும் வகையிலும் 13 புதிய எமோஜிகளை இந்தாண்டு இறுதியில் வெளியிட உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்கள் என்றாலே ஆடை, மேக்கப் என்று அவர்களின் வெளித்தோற்றங்கள் மட்டுமே அடையாளமாக முன்னிறுத்தப்படுகின்றன. ஆனால், எல்லா துறைகளிலும் இன்று ஆளுமைகளாக அசத்திக்கொண்டிருக்கும் பெண்களின் வெற்றியை அங்கீகரிக்கவும், கௌரவிக்கவும் இந்த புதிய எமோஜிகள், ‘உழைக்கும் பெண்கள்’ என்ற பெயரில் வெளியாக உள்ளது என கூகுள் தெரிவித்துள்ளது.

இந்த புதிய எமோஜியில் உடல்நலம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கல்வி, விவசாயம், உணவு, இசை உள்ளிட்ட 13 துறைகளில் பெண்களின் உருவ அமைப்புகள் இந்த எமோஜிகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com