Helio G85, 5000 mAh, 51MP கேமராவுடன் அறிமுகமாகும் POCO C55 ஸ்மார்ட் போன்! சிறப்பம்சங்கள்?

Helio G85, 5000 mAh, 51MP கேமராவுடன் அறிமுகமாகும் POCO C55 ஸ்மார்ட் போன்! சிறப்பம்சங்கள்?
Helio G85, 5000 mAh, 51MP கேமராவுடன் அறிமுகமாகும் POCO C55 ஸ்மார்ட் போன்! சிறப்பம்சங்கள்?
Published on

போகோ இந்தியா மொபைல் நிறுவனம், தற்போது அவர்களது C சீரிஸ் மொபைல் போனின் அடுத்த வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது.

POCO இந்தியா மொபைல் நிறுவனமானது, அவர்களது C சீரிஸின் முதல் பதிப்பு 1 மில்லியன் வாடிக்கையாளர்களையும், இரண்டாவது பதிப்பு 2 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கவர்ந்துள்ளதால், அடுத்த வரலாற்றை உருவாக்கும் விதமாக மூன்றாவது பதிப்பாக, C சீரிஸின் அடுத்த மொபைல் போனை, அனைவரையும் கவரும் விதமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

POCO இந்தியா மொபைல் நிறுவன இன்று தங்களது ட்விட்டர் பதிவில், அவர்களது POCO C31 ஒரு மில்லியன் மைல்கல்லையும், POCO C3 இரண்டு மில்லியன் மைல்கல்லையும் எட்டியிருப்பதற்கான புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். அத்துடன், “புதிய வரலாற்றை உருவாக்குவோம்” என்ற வாக்கியங்களுடன் POCO C55 என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

Helio G85, 5000 mAh பேட்டரி, 51MP மெய்ன் கேமரா முதலிய பியூச்சர்களோடு அறிமுகமாகியுள்ள இந்த மொபைல் போன், ரூ.9,499 மற்றும் ரூ.10,999 விலைகளில் கிடைக்கிறது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து பிலிப்கார்ட்டில் விற்பனை அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு விதமான கெப்பாசிட்டிகளோடு, விற்பனை விலைகளில் சிறிய வித்தியாசத்துடன், இரண்டு மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.9,499க்கான மொபைல் ஆனது 4GB + 64GB, ரூ.10,999க்கான மொபைல் ஆனது 4GB + 128GB மெமரிகளோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் நாளில் மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 மற்றும் HDFC, ICICI அல்லது SBI பேங்குகளின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளில் பணம் செலுத்தினால், கூடுதலாக ரூ.500 என மொத்தமாக ரூ.1000 தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் அறிவித்துள்ளது.

POCO C55ல் இருக்கும் மற்ற பியூச்சர்கள்:

* POCO C55 ஆனது MediaTek-ன் Helio G85 சிப்செட் மற்றும் 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 12-ல் இயங்குகிறது.

* மொபைலில் கூடுதல் நீட்சியாக 5GB டர்போ RAM மெமரியும் கிடைக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களால் மொபைலில் மொத்தமாக 11GB RAMஐ பயன்படுத்திகொள்ள முடியும்.

* லெதரால் செய்யப்பட்ட வடிவமைப்பில் இருக்கும் மொபைல் போன், பின்புறத்தில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகிறது. 10 W சார்ஜிங் செட்டப்புடன், 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

* கேமராவை பொறுத்தவரையில், 5MP ப்ரன்ட் கேமராவுடன்- 50MP பேக் ட்யூவல் கேமாரைவை கொண்டுள்ளது. IP52 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.

* அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் சென்றுசேரும் விதமாக மலிவான விலையில் அறிமுகமாகும் இந்த மொபைல் போன், கூல் ப்ளூ, ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் பவர் பிளாக் போன்ற 3 விதமான கலர்களில் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com