வரும் 4-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் ‘ஃப்ரீ’

வரும் 4-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் ‘ஃப்ரீ’
வரும் 4-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் ‘ஃப்ரீ’
Published on

வரும் 4-ஆம் தேதி இந்திய சந்தையில் ஓப்போ நிறுவனம் தனது தயாரிப்பான ஓப்போ ஸ்மார்ட் வாட்ச் ‘ஃப்ரீ’- யை அறிமுகம் செய்ய உள்ளது. ஓப்போ ரெனோ 7 சீரிஸ் ரக போன் வெளியீட்டுடன் இதனை அறிமுகம் செய்ய உள்ளதாக ஓப்போ நிறுவனம் அறிவித்துள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வாட்ச் அறிமுகமாக உள்ளது. 

 

இதன் சிறப்பம்சம்!

1.64 இன்ச் AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 100 விதமான வாட்ச் ஃபேஸ்கள், 100 விதமான வொர்க் அவுட் மோட் சப்போர்ட், வாட்டர் ஃப்ரூப், ஹார்ட் ரேட் மானிட்டர், 230 mAh பேட்டரி கொண்டுள்ளது இந்த வாட்ச். ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை சார்ஜ் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் இந்த வாட்ச் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓப்போ Enco M32 ஹெட்செட்டும் இதனுடன் வரும் 4- ஆம் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com