கர்பப்பை புற்றுநோயை குணப்படுத்த புதிய மருந்து

கர்பப்பை புற்றுநோயை குணப்படுத்த புதிய மருந்து
கர்பப்பை புற்றுநோயை குணப்படுத்த புதிய மருந்து
Published on

பெண்களை தாக்கும் கர்பப்பை புற்றுநோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்களை கர்பப்பை புற்றுநோய் அதிக அளவில் தாக்குகிறது. அந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு ஓஎன்எக்ஸ்-0801 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த மருந்தில் உள்ள போலிக் அமிலம் புற்று நோய் பாதித்த செல்களுக்குள் ஊடுருவி புற்றுநோய் கட்டிகளின் அளவை படிப்படியாக சுருக்கி சிறியதாக்குகின்றன.

மேலும் இந்த மருந்தினால் நல்ல நிலையில் உள்ள செல்கள் அழியாது. புற்றுநோய் பாதித்த செல்கள் மட்டுமே அழிகின்றன. இந்த மருந்தை இங்கிலாந்தில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் மருந்து தயாரிப்பு நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்தை கர்ப்பபை புற்று நோய் பாதித்த 15 பெண்களுக்கு பயன்படுத்தினர். அவர்களில் 7 பேருக்கு புற்று நோய் கட்டி சுருங்கி சிறியதானது. இதன் மூலம் இம்மருந்து மூலம் கர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com