சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஆன ஒன் ப்ளஸ் 6 சிறப்பம்சங்கள் மற்றும் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.
சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஆன ஒன் ப்ளஸ் மாடல்கள் இந்திய சந்தையில், முன்னணி விற்பனையாகி வருகிறது. அதன்படி ஒன் ப்ளஸ் 5டி மற்றும் ஒன் 5 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் 2017ஆம் வெளியாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் ஒன் ப்ளஸ் 6 எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மொபைல் பிரியர்கள் மத்தியில் காணப்பட்டது.
இந்நிலையில் ஒன் ப்ளஸ் 6 தயாராகி வருவதாகவும், விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த ஸ்மார்ட்போன் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படம் இணையத்தில் கசித்துவிட்டது. அதன்படி 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜை இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. பின்புறம் இரட்டைக் கேமராவும், முன்புறம் ஒரு செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை எம்பி திறன் கொண்டது என்று தெரிவிக்கப்படவில்லை. மேலும் 19:9 ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் இந்த போன் வெளியாகவுள்ளது.