நத்திங் (1) மொபைல்! இந்தியாவிலும் உலகளாவிய சந்தையிலும் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியானது. பின்புற பேனலில் 900 எல்இடிகள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வெளியான இந்த மொபைலின் டாப் 5 சிறப்பம்சங்கள் இதோ!
1. 900 எல்இடிகள் உடன் ஒளிரும் பின்புற பேனல்:
மொபைல் கிளைஃப் பின்புற பேனலை பெற்றுள்ளது. இதில் உள்ள 900 எல்இடிகள் உதவியால் புதிய அறிவிப்பு அல்லது அழைப்பு வரும்போது பேனலானது ஒளிரும். இது 10 வகையில் ஒளிரும் வசதியும் பெற்றுள்ளது.
2. நத்திங் ஓ.எஸ்:
நத்திங் ஃபோன் ஆண்ட்ராய்டு 12 உடனான NothingOS தளத்தில் இயங்குகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 778+ SoC வசதியுடன் இது வெளியாகி உள்ளது
3. கேமரா எப்படி?
கேமரா முன்புறத்தில், நத்திங் (1) இல் பின்புற பேனலில் 50 மெகாபிக்சல் சோனி IMX766 சென்சார் + 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே உள்ள 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. கேமரா பயன்பாட்டில் மேக்ரோ, முன் மற்றும் பின் இரவு முறை போன்ற பல்வேறு முறைகள் வழங்கப்பட்டு உள்ளன.
4. பேட்டரி எவ்வளவு?
நத்திங் (1) 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட 4500mAh பேட்டரி உடன் வெளியாகி உள்ளது. 60 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ஆதரவுடன் 6.55-இன்ச் நெகிழ்வான OLED டிஸ்ப்ளேவுடன் வெளியாகி உள்ளது.
5. விலை எவ்வளவு?
நத்திங் ஃபோன் (1) இந்தியாவில் மூன்று வகைகளில் வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு கொண்ட அடிப்படை மாடல் ரூ.32,999 விலையில் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு உள்ளிட்ட மற்ற இரண்டு மாடல்களின் விலை முறையே ரூ. 35,999 மற்றும் ரூ. 38,999 ஆகும். பிளிப்கார்ட் தளத்தில் இம்மொபைலை HDFC வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளிம் மூலம் வாங்கினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.