டிக்டாக் போல கடும் சர்ச்சைக்கு ஆளான விதவிதமான செயலிகள்

டிக்டாக் போல கடும் சர்ச்சைக்கு ஆளான விதவிதமான செயலிகள்
டிக்டாக் போல கடும் சர்ச்சைக்கு ஆளான விதவிதமான செயலிகள்
Published on


டிக்டாக் வரிசையில் மக்களிடம் கடும் விமர்சனங்களுக்கு ஆளான செயலிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

டிக்டாக் - இன்று இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் உபயோகிக்கப்படுத்தப்படும் ஒரு செயலி. சினிமா பாடல்களோ அல்லது வசனங்களோ சில நிமிடங்களே ஓடக் கூடிய பதிவின் பின்னணியில் இசையை இணைத்து வீடியோவாக வெளியிட வேண்டும். அதுதான் இதற்கான விதிமுறை.


டிக்டாக் அறிமுகமானதிலிருந்தே இளசுகளிடம் அமோக வரவேற்பைப் பெற்றதது. அந்த வரவேற்பு காலப்போக்கில் டிக்காக்கை அனைத்துத்தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது. ஆனால் ஆரம்பத்தில் மற்றச் செயலிகள் போல சுமுகமாகச் சென்று கொண்டிருந்த டிக்டாக், அதில் பதிவிடப்பட்ட நாகரிகமற்ற வீடியோ பதிவுகளால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அந்த விமர்சனங்களின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்புதான் இன்று பெரும்பான்மையான மக்களை டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என்று சொல்ல வைத்திருக்கிறது.


CarryMinati என்ற யூடியூப் சேனலில் தனக்கே உரித்தான பாணியில் விமர்சனங்களை முன்வைக்கும் ஒருவர் கடந்த ஆண்டு சில டிக்டாக் வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து அது குறித்த தனது விமர்சனங்களைக் காட்டமாக முன்வைத்தார். அதற்கு இந்தியர்கள் பலர் ஆதரவு அளித்ததுடன் டிக் டாக்கைத் தடை செய்ய வேண்டும் என்று பிரசாரங்களில் இறங்கினர்.

தற்போது கூகுள் ப்ளே செயலிகளைப் பதிவிறக்கும் தளத்தில் டிக்டாக்கிற்கு மக்கள் ரேட்டிங்கில் 1.2 புள்ளியை மட்டுமே வழங்கியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு டிக் டாக் பெரும்பான்மையான மக்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

டிக் டாக் மட்டும் இது போன்ற விமர்சனங்களைச் சந்திக்கவில்லை. இதற்கு முன்னர் பல செயலிகள் இது போன்ற விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.


MS Excel vs Surf Excel in 2019

கடந்த ஆண்டு மார்ச் மாதம் குறிப்பிட்ட இரண்டு மதத்தினரை மையப்படுத்தி சலவை பொடிக்காக விளம்பரம் ஒன்று தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த விளம்பரம் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதில் சிலர் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமானதுதான் மைக்ரோ சாப்ட் எக்ஸல் எனக்கருதி, மைக்ரோ சாப்ட் எக்ஸலை மொபைல் போனில் இருந்து நீக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் போர்க் கொடி தூக்கினர். கூகுள் ப்ளே ஸ்டோரிலும் தங்களது விமர்சனங்களால் மைக்ரோ சாப்ட் எக்ஸலை ரேட்டிங்கில் 1 க்கு கொண்டு வந்தார்கள்.


Snapchat in 2017

கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்னாப் சாட் செயலியின் தலைமை நிர்வாகி இந்தியா ஒரு ஏழை நாடு என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான இந்தியர்கள் ட்விட்டரில் #BoycottSnapchat என்ற ஹேஷ்டக்கை போட்டு ட்ரெண்ட் செய்தனர்.

Amazon in 2017

அதே ஆண்டில் அமேசான் நிறுவனம் இந்தியக் கொடியைத் தனது தளத்தில் விற்பதாக அறிவித்தது. இதனைக் கேட்டுக் கோபமடைந்த அப்போதையை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமேசான் ஊழியர்களின் விசா தடை செய்யப்படும் என எச்சரித்தார். அதன் பின்னர் அமேசான் தனது மன்னிப்பைத் தெரிவித்தது.

Snapdeal and Amir Khan in 2015

கடந்த 2015 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமீர்கான் சகிப்புத் தன்மைக் குறித்த தனது கருத்தைத் தெரிவித்தார். இதற்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். அப்போது அவர் ஸ்னாப் டீல் செயலியின் தூதராக இருந்தார். அதனால் மக்கள் அந்த செயலி குறித்த தனது விமர்சனங்களைப் பதிவு செய்து, அதை செல்போனில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com