X (முன்பு ட்விட்டர்) தளத்தின் உரிமையாளர் மற்றும் தலைமை சிஇஒவான எலான் மஸ்க் அதிரடி முடிவுகளுக்கும், தனக்கு தோன்றிய கருத்துகளை தடாலடியாக திறந்த மனதுடன் பேசுவதற்கும் பெயர் போனவர். அதுமட்டுமல்லாமல் செய்ற்கைக்கோள் தகவல்தொடர்பு ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங், நியூராலிங் நிறுவனத்தின் மூலம் மனித பேராற்றல் மீட்பு, சமூகத்தொடர்பு வலைதளமான எக்ஸ், செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்ட முயற்சி போன்றவற்றின் மூலம் (global connectivity) உலக இணைப்புக்கான செயல்பாடுகளில் அதிகமாக ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில்தான், உலக இணைப்பில் முக்கிய இடத்தில் இருக்கும் சமூக வலைதளமான எக்ஸில் அனைத்துவிதமான சேவைகளையும் பெறுதல், நீயூராலிங் நிறுவனத்தின் மூலம் உடல் செயலிழந்து போன மனிதர்களின் மூளையாற்றலை மீட்டெடுத்தல், செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை சரியாக பயன்படுத்துதல் மூலம் தொடர்ந்து உலகளாவிய சிந்தனைகளை மேற்கொண்டுவரும் எலான் மஸ்க்கிற்கு, 2024-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வழங்கிவேண்டும் என நார்வே எம்பி மரியஸ் நில்சன் தெரிவித்துள்ளார்.
நியூராலிங் நிறுவனத்தின் மூலம் மனித மூளைக்குள் சிப் பொறுத்தி, மனித திறமைகளை வெளிக்கொண்டுவரும் முயற்சியில், உடல்பாகங்கள் செயலிழந்த முதல் மனிதன் குணமடைந்துவருவதாக தெரிவித்த எலான் மஸ்க், தற்போது அந்த மனிதன் கணினி கர்சர்களை இயக்கிவருவதாகவும் தெரிவித்தார். இந்த சூழலில் தான் அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்கிற்கு வழங்கவேண்டும் என்ற பரிந்துரையை மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.
2024-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்கிற்கு வழங்க வேண்டும் என, நார்வே எம்பியான மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார். அதற்கான முறையான காரணங்களை அடுக்கியிருக்கும் நில்சன், எலான் மஸ்க் அதற்கு சரியானவர் என்றும் கூறியுள்ளார்.
மஸ்க் குறித்து முன்மொழிந்த மரியஸ் நில்சன், “ரஷ்யா-உக்ரைன் போரின் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட உக்ரேனிய ரானுவத்திற்கு செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் அனைத்து விசயங்களுக்காகவும் திறந்த உரையாடல்” என பல்வேறு தரப்பட்ட அவருடைய பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்க வேண்டுமென மரியஸ் நில்சன் வலியுறுத்துள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், பொதுவெளியில் அரசியல் கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்காக முடக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட, பல டிவிட்டர் கணக்குகளை மஸ்க் மீட்டெடுத்தார்.