நோக்கியா எக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன் தகவல்கள் மற்றும் விலை இணையத்தில் கசிந்துள்ளது.
நோக்கியா நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனான நோக்கியா எக்ஸ் வரும் 16ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் பெய்ஜிங்கில் வெளியாகவுள்ளது. இந்த போன் தொடர்பாக ஏற்கெனவே இணையத்தில் வதந்திகள் பரவி வந்தது. நோக்கியா எக்ஸ் 6 என்ற பெயரில், வரும் 16 சீனாவில் புதிய நோக்கியா மாடல் போன் வெளியாகவுள்ளதாக அந்த வதந்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போனின் பெயர் ‘நோக்கியா எக்ஸ்’ என்பதும், அது சீனாவில் அல்ல பெய்ஜிங்கில் வெளியாகிறது என்பதும் உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக நோக்கியாவின் விளம்பர இணையதளம் ஒன்றில் வெளியாகிவுள்ள தகவலில், நோக்கியா எக்ஸ் போனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ‘நோக்கியா எக்ஸ்’ போனின் பின்புறத்தில் இரட்டைக் கேமராவுடன், விரல் ரேகை பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இணையத்தில் கசிந்துள்ள தகவலின் படி, “‘நோக்கியா எக்ஸ்" ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில், 5.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. குவால்காம் ஸ்நேப் ட்ராகன் 636 அல்லது மீடியாடெக் ஹெலியோ பி60 சோசி திறனுடன் இயங்கும். 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் என்ற இரண்டு ரகங்களில் வெளியாகும். அவற்றிற்கு 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் முறையே வழங்கப்பட்டிருக்கும். பின்புறத்தில் 12 எம்பி கொண்ட இரட்டைக்கேமரா வழங்கப்பட்டிருக்கும். இதன் விலை ரூ.16,900 ஆகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.