வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் (UW) ஆராய்ச்சியாளர்கள், காய்ச்சலைத் துல்லியமாகக் கண்டறியும் ‘ஃபீவர்ஃபோன்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இதனை பயன்படுத்தி உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். மேலும் உடல்வெப்பநிலையை அவ்வப்போது தெரிந்துகொண்டு, அதற்கேற்றார் போல் நம்மை கவனித்துக்கொள்ளலாம்.
இந்த செயலியை கண்டுபிடிப்பதில் முக்கியமானவராக இருந்த முனைவர் பட்டம் பெற்ற ஜோசப் ப்ரெடா கூறுகையில், “இளங்கலையில் நான் ஒரு ஆய்வகத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது காற்றின் வெப்பநிலையை அளவிட ஸ்மார்ட்போனில் இருக்கும் வெப்பநிலை சென்சாரை பயன்படுத்த முடியும் என்பதை நாங்கள் காட்ட விரும்பினோம். பின்னர் நான் வாஷிங்டன் பல்கலைகழகத்திற்கு வந்தபோது, எனது ஆலோசகரும் நானும் ஆரோக்கியத்திற்காக இதேபோன்ற நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று ஆலோசித்தோம்” என்று கூறியதாக வாஷிங்டன் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த செயலியானது “மக்கள் காய்ச்சல் உள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கு தொலைபேசியில் இருக்கும் சென்சார்களைப் பயன்படுத்தும் முதல் பயன்பாடு” என்று தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன்களை வெப்பமானியாக மாற்றும் இந்த செயலியானது எதற்காக என்று தெரிவித்திருக்கும் வாஷிங்டன் ஆராய்ச்சிக்குழு, “காய்ச்சல் என்பது அனைத்து நோய்களுக்கும் முன்னதாக வெளிப்படும் முதல் அறிகுறி. விரைவான நோயறிதல் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்க, வெப்பநிலை சோதனை முக்கியமானது. அதனை சரிபார்த்துக்கொள்ள எல்லோரிடமும் தெர்மோமீட்டர் இருப்பதில்லை. கோவிட் 19 வந்த சூழலில் தெர்மோமீட்டர்கள் அதிகமான மக்களுடைய கைகளுக்கு சேராமல் போனது. சிலரால் வாங்க முயற்சித்தும் வாங்கமுடியவில்லை.
எல்லோருக்கும் தேவைப்பட்டாலும் இது முக்கியமான சில நேரங்களில் மட்டுமே தேவையான ஒன்றாக இருக்கிறது. அப்போதும் அதன் விலையால் வாங்க முடியாத மக்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வாங்க முடியாத மக்களும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தான் இந்த “ஃபீவர்போன்” செயலி” வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சிக்குழு தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்களானது உள் கூறுகளின் வெப்பநிலையைக் கண்காணிக்கும் தெர்மிஸ்டர்களை டிஃபால்டாக கொண்டுள்ளன. இந்த சென்சார்கள் மொபைல் போனுடன் தொடர்பிலுக்கும் மற்றவற்றின் உணர்திறனையும் அறிந்துகொள்ளும் தன்மை கொண்டவை. இந்த உணர்திறனை வைத்து தான் FeverPhone பயன்படுத்துகிறது.
இந்த செயலியை பயன்படுத்தி உடலின் வெப்பநிலையை தெரிந்து கொள்ள மக்கள் அவர்களின் நெற்றியில் மொபைலை வைக்கவேண்டும். அப்போது உடலானது மொபைலின் தொடுதிரையில் படும்போது வெப்பநிலையானது ரா கெபாசிட்டன்ஸ் மூலம் தெர்மிஸ்டருக்கு கடத்தப்படுகிறது. அதன்பிறகு உடலின் வெப்பநிலையானது குறிப்பிட்ட சில அம்சங்களால் கணக்கிடப்படுகிறது.
வாஷிங்டர்ன் பலகலைக்கழக ஸ்கூல் ஆஃப் மெடிசின் அவசர சிகிச்சைப் பிரிவில் FeverPhone சோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனைக்காக, லேசான காய்ச்சலுடன் கூடிய 16 பேர் உட்பட 37 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தொடுதிரையை நெற்றியில் வைத்து 90 வினாடிகள் அழுத்தினார்கள். அதன்பிறகு வெப்பநிலை கணக்கிடப்பட்டது.
FeverPhone செயலியானது ஒட்டுமொத்தமாக நோயாளிகளின் முக்கிய உடல் வெப்பநிலையை சராசரியாக 0.41 ஃபாரன்ஹீட் (0.23 டிகிரி செல்சியஸ்) பிழையுடன் மதிப்பிட்டுள்ளது. இது மருத்துவ ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய 0.5 ஃபாரன்ஹீட் வரம்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது வெளியீட்டிற்காக, உலகின் அறிவியல் மற்றும் தொழில் ரீதியாக கணினியை முன்னேற்றும் வளங்களை வழங்கும் ACM இடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. விவரத்தை தெரிந்து கொள்ள இங்கே Click செய்யவும்.