வாட்ஸ் அப் அப்டேட் ஏன்? - ஹேக்கர்கள் ஊடுருவுவது எப்படி?

வாட்ஸ் அப் அப்டேட் ஏன்? - ஹேக்கர்கள் ஊடுருவுவது எப்படி?
வாட்ஸ் அப் அப்டேட் ஏன்? - ஹேக்கர்கள் ஊடுருவுவது  எப்படி?
Published on

பிகாசுஸ் என்ற ஸ்பைவேர் அண்மையில் செல்போன் பயனர்களின் தரவுகளை திருட பரப்பப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. 

பிகாசுஸ், போன் கால்கள் மூலம் பயனர்களின் செல்போன்களில் தானாகவே பதிவிறக்கம் செய்யப்படுகிறது. பின்னர் பயனரின் அனுமதியின்றி கேமரா, மைக், ஆகியவை தானாக செயல்பட்டு பயனரின் தரவுகள் ஹேக்கருக்கு அனுப்பப்படுகிறது. பிகாசுஸ், பயனர்களின் குறுஞ்செய்திகள் மற்றும் இ-மெயில்களை ஹேக்கர்களுக்கு அனுப்பும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயனர்கள் உடனடியாக வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டுமென கூறியுள்ளது. மேலும் பயனர்கள் தாங்கள் செல்போன்களின் பயன்படுத்தும் ஓஎஸ் என்படும் இயங்கு தளத்தையும் அப்டேட் செய்து பிகாசுஸ் வைரஸிலிருந்து காத்துக் கொள்ள அறிவுரை வழங்கி உள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில், பிகாசுஸ் வைரஸ் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரின் செல்போனை ஊருவிய போது முதல் முதலாக கண்டறியப்பட்டது. பிகாசுஸ் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட பயனர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

பயனர்கள் தங்களின் தனிபட்ட தரவுகளை காத்துக் கொள்ள மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. வாட்ஸ் அப்பில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டாலும் பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பது மிகப்பெரும் சவாலாகவே இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், புகைப்படம், வீடியோ போன்றவற்றை அனுப்புநர் மற்றும் பெறுநரை தவிற வேறு யாராலும் பார்க்க முடியாதா? என்றால் அது கேள்விக்குறியே.

வாட்ஸ் அப் போன்று தோற்றமுடைய வாட்ஸ் அப் ப்ளஸ், வாட்ஸ் அப் ஜிபி உள்ளிட்ட செயலிகளே தகவல் திருட்டில் ஈடுபடுகின்றன. இத்தகைய போலியான செயலிகள் ப்ளே ஸ்டோரில் கிடைப்பதில்லை. லிங்குகள் மூலமே பிறருக்கு பகிரப்படுகிறது.

தேவையற்ற லிங்குகள் மூலம் புதிய புதிய செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும், சமூக வலைதளங்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் கசியாமல் இருக்க பயனர்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com