Google Chrome-ன் வயது என்ன? Google வெளியிட்ட அசத்தல் அப்டேட்!
இன்று உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் தேடல் இயந்திரமாக திகழ்வது கூகுள் குரோம். இதற்கு போட்டியாக பல தேடல் இயந்திரங்கள் வெளிவந்தாலும், பயனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இருப்பதனால் கூகுள் முதலிடத்தை என்றும் பிடிக்கிறது. கூகுள் தனது 15வது அகவையில் எடுத்துவைப்பதை முன்னிட்டு கூகுள் பல முக்கிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி கூகுள் குரோமின் முகப்பு பக்கத்தை பயனாளிகளின் விருப்பத்திற்கேற்ற வகையில் மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தரவுகளை சுலபமாக தேடிப்பெறுவதற்கான அம்சங்களையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு தரவுகளை பெறும் பயனாளிகளின் தனியுரிமை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து பயனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக செயற்கை நுண்ணறிவு பொருந்திய எக்ஸ்டென்ஷன்களையும் கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.