ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற புது அப்டேட் ஒன்றைச் சேர்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் சமீபத்தில் 2ஜிபி வரையிலான கோப்புகளை பகிரும் வசதி, மெசேஜ்களுக்கு எமோஜி எதிர்வினைகள் போன்ற சில அம்சங்களை வெளியிட்டது. இத்துடன் குழு அட்மின்களுக்கு குழுவில் பகிரப்படும் எந்த ஒரு செய்தியையும் நீக்கும் சிறப்பு அதிகாரத்தை வழங்கியது. இந்நிலையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியை மிகவும் பயனுள்ளதாக மாற்ற புது அப்டேட் ஒன்றைச் சேர்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பிரிவில் எந்தவொரு வலைத்தளம் அல்லது மூலத்திற்கும் இணைப்புகளைச் (LINK) சேர்க்க முடியும். இனி நீங்கள் இணைப்புகளை ஸ்டேட்டஸில் பகிரும்போது அதன் முன்னோட்டத்தை (PreView) காண்பிக்கும் வசதியை அறிமுகம் செய்ய வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் மேலும் சில ஈர்ப்பைப் பெற்று அந்த இணைப்புகளை கிளிக் செய்வார்கள் என வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது. இந்த அம்சம் WhatsApp இன் iOS பதிப்பில் வெளியாகி உள்ளது. இந்த அம்சம் எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளுக்கு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.