வீட்டுத்தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மனித வாழ்வின் அனேகமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் ரோபோ தொழில்நுட்பம் தற்போது தோட்ட கலையிலும் களமிறங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மனிதனுக்கு நிகராக சிந்தித்து செயற்படக்கூடிய வகையில் ரோபோவை வடிவமைக்கும் முயற்சிகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவை ஃபிராங்கிளின் ரோபோட்டிக்ஸ் குழு வடிவமைத்துள்ளது. இது முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. ரோபோவை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இந்த ரோபோவை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது கிக்ஸ்டார்டர் இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இந்த ரோபோ 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை அமெரிக்க மதிப்பில் 225 டாலர் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.