புதிய ரெட்மி ஃபோன் நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என ரெட்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோமியின் ரெட்மி நோட் 4 ஃபோன்கள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்து ரெட்மி நோட் 5 எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. ஏனெனில் ரெட்மி 4 ஃபோன்கள் 3ஜிபி, 4ஜிபி ரேம் வசதிகளுடன் ரூ.9,999, ரூ.10,999 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதலில் ரூ.11,999 மற்றும் ரூ.12,999 விலையில் விற்கப்பட்ட இந்த ஃபோன்களின் விலை தற்போது நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுவே அடுத்த மாடலான ரெட்மி நோட் 5 எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் ரெட்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ரெட்மி ஃபோன் நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரெட்மி பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த புதிய ஃபோன் ரெட்மி நோட் 5 ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளேவுடன், 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் என்ற அடிப்படையில் சேமிப்புத்திறன் கொண்டிருக்கும் எனவும் கருதப்படுகிறது.