’Statusக்கான ப்ரைவசி இனி இதற்கும் பொருந்தும்’ : பயனர்களுக்கு அப்டேட் மழை பொழிந்த Whatsapp!

’Statusக்கான ப்ரைவசி இனி இதற்கும் பொருந்தும்’ : பயனர்களுக்கு அப்டேட் மழை பொழிந்த Whatsapp!
’Statusக்கான ப்ரைவசி இனி இதற்கும் பொருந்தும்’ : பயனர்களுக்கு அப்டேட் மழை பொழிந்த Whatsapp!
Published on

பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதற்காக சமூக வலைதள நிறுவனமான வாட்ஸ்அப் தொடர்ந்து தனது பயனர்களுக்கு புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது.

அந்த வகையில் ப்ரைவசி கண்ட்ரோல் செட்டிங்ஸை மேம்படுத்தியிருப்பதன் மூலம் பயனர்கள் தங்கள் குறித்த விவரங்களை மறைத்து வைத்துக்கொள்ள உதவும் என வாட்ஸ் அப் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதன்படி, வாட்ஸ் அப் ப்ரைவசியில் last seen, status, about ஆகியவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில் தற்போது profile picture யாருக்கெல்லாம் தெரியும்படி வைக்கலாம், புதிய வாட்ஸ் அப் குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றுக்கு ப்ரைவசி கட்டுப்பாட்டை பயனர்களுக்கு கொடுத்திருக்கிறது வாட்ஸ் அப்.

அதேபோல புதிதாக வாட்ஸ் அப் குழுவில் தெரியாதவர்கள் மூலம் சேர்க்க முடியாதபடி அதற்கும் Everyone, My Contact & My Contact Except என்ற படிநிலைகளை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

இதில் Nobody என்ற ஆப்ஷன் Last seen, profile picture மற்றும் about ஆகியவற்றுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com