ஆந்திராவில் கொள்ளை சம்பவங்களை காவலர்கள் எளிதில் தடுக்கும் வகையில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.
லாக் ஹவுஸ் மானிட்டரிங் சிஸ்டம் என்ற இந்த புதிய செயலி கொள்ளை சம்பவங்களை தடுக்க முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி வெளியூர்களுக்கு செல்லும் போது காவல்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வரும் காவல்துறையினர் தற்காலிக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி செல்வர். ஒருவேளை கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்தால், உரிமையாளருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் செல்லும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளை சம்பவங்களை எளிதில் தடுக்க முடியும்.