ஆண்ட்ராய்டு போன்களில் பணம் திருடும் மால்வேர்: கேஸ்பர்ஸ்கை அதிர்ச்சி தகவல்

ஆண்ட்ராய்டு போன்களில் பணம் திருடும் மால்வேர்: கேஸ்பர்ஸ்கை அதிர்ச்சி தகவல்
ஆண்ட்ராய்டு போன்களில் பணம் திருடும் மால்வேர்: கேஸ்பர்ஸ்கை அதிர்ச்சி தகவல்
Published on

ஆண்ட்ராய்டு ஃபோன்களின் மூலம் பணம் பறிக்க ஸ்சேஃப்காப்பி ட்ரோஜன் என்ற மால்வேர் உலகம் முழுவதும் பரவி வருவதாக இணையதள பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை எச்சரித்துள்ளது.

ஸ்சேஃப்காப்பி ட்ரோஜன் என்ற மால்வேர், உங்களது ஆண்ட்ராய்டு ஃபோன்களில் க்ளீன் மாஸ்டர், பேட்டரி சேவர் போன்ற ஆப்கள் போன்று இருக்கும். இந்த மால்வேர், உங்களது ஃபோன் பணப் பரிவர்த்தனையை கண்காணிக்கும். பின்னர் உங்களுக்குத் தெரியாமலேயே பணத்தை திருடிக் கொள்ளும். இந்த மால்வேர் உங்களது ஃபோனில் ரகசியமாக சில தீங்கிழைக்கும் குறியீடுகளை செலுத்திவிடும். இதன் மூலமே நீங்கள் வேப் (WAP) மூலம் செய்யும் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும். 

மேலும் இந்த மால்வேர் உங்கள் ஃபோனில் நுழைந்துவிட்டால், உங்களுக்குத் தெரியாமல் அது தாமாகவே சில தேவையில்லாத சேவைகளில் உங்கள் எண்ணை பதிவு செய்துவிடும். இதனால் உங்களின் ஃபோன் பில் கடுமையாக அதிகரிக்கும். கட்டணத்தை நீங்கள் கட்டாயம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உங்களுக்கு தெரியாமல் மால்வேரால் பதிவு செய்யப்பட்ட அந்த சேவைகளுக்கான பணத்தை மால்வேர் அட்மின்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்தியாவில் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் 40 சதவீதத்தினரின் ஃபோன்கள் இந்த மால்வேரால் பாதிப்படைந்துள்ளதாக கேஸ்பர்ஸ்கை கூறுகிறது. 

இந்த ஸ்சேஃப்காப்பி மால்வேர் ஒரே மாதத்தில், 47 நாடுகளில், சுமார் 4800 ஃபோன்களை தாக்கியுள்ளது. இதில் 37.5 சதவீத தாக்குதல்களை தடுத்துள்ளதாக கேஸ்பர்ஸ்கை நிறுவனம் தெர்வித்துள்ளது. இந்த ஆபத்தான மால்வேரிலிருந்து உங்கள் ஃபோனை காப்பாற்றிக்கொள்ள, மூன்றாம் தர ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று கேஸ்பர்ஸ்கை கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com