கருந்துளையை சுற்றி சக்திவாய்ந்த காந்தப்புலம்!

கருந்துளையை சுற்றி சக்திவாய்ந்த காந்தப்புலம் இருப்பதற்கான புகைப்பட ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.
EVENT HORIZON TELESCOPE - Black holes
EVENT HORIZON TELESCOPE - Black holesTwitter
Published on

ஈவன்ட் ஹாரிசன் டெலஸ்கோப் (EVENT HORIZON TELESCOPE) மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், பால்வெளி அண்டத்தின் மிகப்பெரிய கருந்துளையான சகிட்டாரியஸ் ஏ கருந்துளை இடம் பெற்றுள்ளது. இந்த கருந்துளையை சுற்றி சக்திவாய்ந்த காந்தபுலம் இருப்பதும் அந்த புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஹபுள், ஜேம்ஸ்வெப் ஆகிய தொலைநோக்கிகள் எடுத்த கருந்துளையின் புகைப்படத்தை காட்டிலும் வித்தியாசமாக இந்த புகைப்படம் காணப்படுகிறது. ஈவன்ட் ஹாரிசன் டெலஸ்கோப் திட்டத்தின் மூலம் உலகின் பல்வேறு வானியல் ஆய்வாளர்கள் இணைந்து உலகின் பல்வேறு பகுதிகளில் ரேடியோ தொலைநோக்கிகளை அமைத்து கருந்துளை ஆய்வு செய்யப்பட்டு வந்தது.

EVENT HORIZON TELESCOPE - Black holes
Z40 ultra | எல்லாமே ஒரே பட்டன் தான்... இந்த TWSல் அப்படியென்ன ஸ்பெஷல்..!

தற்போது அதன் மூலம் திரட்டப்பட்ட தகவலின் மூலம் இந்த புகைப்படம் மெருகேற்றப்பட்டுள்ளது. இது கருந்துளை குறித்த ஆராய்ச்சியில் அடுத்த கட்டத்தை எட்டியதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com