உங்கள் கம்யூட்டரில் நீஙகள் வைத்திருக்கும் தகவல்களைப் பாதுகாக்க புது வசதியைக் கொண்டு வருகிறது கூகுள்.
கூகுள் ட்ரைவ், ஏற்கனவே நாம் மின்னஞ்சல் வழியாக அனுப்புவதை, பெறுவதை க்ளவுடில் சேமிப்பதற்கான, நல்ல ஸ்டோரேஜ் கருவியாக விளங்குகிறது. வரும் 28-ஆம் தேதி முதல், உங்கள் ஹார்ட் ட்ரைவையும் கூகுள் ட்ரைவில் சேமிப்பதற்கான ஏற்பாடுகளுடன் கூகுள் ட்ரைவ் மேம்பட இருக்கிறது.
இந்த வசதியை பெறுவதற்கு, பேக்-அப் மற்றும் சின்க் கருவியை டவுன்லோடு செய்து, மின்னஞ்சல் கணக்கில் உள்நுழைய வேண்டும். PC அல்லது Mac-இல் உள்ள எந்த ஃபோல்டர்கள் சேமிக்கப்படவேண்டும் என்பதை தேர்வுசெய்துகொண்டு, அதை ட்ரைவில் சேர்க்கலாம்.
ஏற்கனவே இருக்கும் இலவச கூகுள் ஸ்டோரேஜ், ஏற்கனவே ஒவ்வொரு கணக்கிற்கும் 15 ஜிபி வரை அளிக்கிறது. இதைத் தவிரவும், கூடுதல் ஸ்ட்ரோஜ் ஸ்பேஸ் தேவைப்பட்டால், 100 ஜிபிக்கு $1.99, 1டிபிக்கு $9.99 என்னும் வருடாந்திர தொகையை செலுத்த வேண்டும்.
சில அலுவலகங்களில் G Suite-ஐ பயன்படுத்தினாலோ, கூகுள் ட்ரைவை முடக்கியிருந்தாலோ, இந்த பேக் அப் மற்றும் சின்க் வசதியைப் பயன்படுத்த முடியாது.