இன்றைய டிஜிட்டல் உலகில் அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் அப்.
தனது பயனர்களை கவரும் வகையில் அவ்வபோது புதிய பியூச்சர்கள் மற்றும் அப்டேட்களை அறிமுகம் செய்து வாட்ஸ் அப் நிறுவனம் அசத்தும்.
அந்த வகையில் இம்முறை வாட்ஸ் அப்பில் சேட் செய்யும் போது அதன் பேக் கிரவுண்டில் உள்ள வால்பேப்பரின் ஒளி அளவை மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய அப்டேட்டில் வாட்ஸ் அப்பின் டிரேட் மார்க் டூடூல்களை முழுவதுமாக அகற்றவும், அதன் வண்ணத்தை மாற்றவும், ஒப்பாசிட்டி ரேஷியோவை குறைக்கும் வசதிகளும் இடம்பிடிக்க உள்ளதாக தெரிவித்துள்ள வாட்ஸ் அப் பீட்டா.
அதோடு விரைவில் வாட்ஸ் அப் கால் பட்டனின் இன்டெர்பேஸிலும் புதிய மாற்றங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.