இனி எப்போதும் ‘மியூட்' - ‘வாட்ஸ் அப்’ பின் புதிய அப்டேட்..!!

இனி எப்போதும் ‘மியூட்' - ‘வாட்ஸ் அப்’ பின் புதிய அப்டேட்..!!
இனி எப்போதும் ‘மியூட்' - ‘வாட்ஸ் அப்’ பின் புதிய அப்டேட்..!!
Published on

chat-ஐ எப்போதும் மியூட்டில் வைக்கும் வகையில், புதிய அம்சத்தை உருவாக்கி வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.

பயனர்கள் ஒரு தனிநபர் அல்லது குழு chat-ஐ எட்டு மணி நேரம், ஒரு வாரம் அல்லது ஒரு வருடம் மியூட் செய்யலாம் என்று இருந்தது. இந்நிலையில் தற்போது Android மற்றும் iOS க்கான புதிய வாட்ஸ் அப் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இனி எப்போதும் (Always) மியூட் செய்துகொள்வதற்கான வசதியை பயனர்களுக்கு வாட்ஸ் அப் அளித்துள்ளது. இந்த புதிய அம்சம் கடந்த சில மாதங்களாக iOS மற்றும் Android பீட்டா பயன்பாட்டில் சோதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட்டில் chat-ஐ மியூட் செய்வதில் ஒரு வருடம் என்பதற்கு பதிலாக எப்போதும் (Always) என்ற option-ஐ கொடுத்துள்ளது.

ஒருவேளை யாருக்கேனும் புதிய அப்டேட் காட்டவில்லை என்றால் அவர்களின் வாட்ஸ் அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு முன்னதாக, வாட்ஸ் அப்பில் போட்டோ, gif ஃபைல், லிங்க்ஸ், வீடியோஸ், கோப்புகள், ஆடியோ ஆகியவற்றை தேடி கண்டுபிடிக்கும் வகையில் search option சேர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com