குரல் பாஸ்வேர்டு, கொஞ்சம் டேஞ்சர்தான்!

குரல் பாஸ்வேர்டு, கொஞ்சம் டேஞ்சர்தான்!
குரல் பாஸ்வேர்டு, கொஞ்சம் டேஞ்சர்தான்!
Published on

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் தினம் தினம் ஒரு டெக்னாலஜி களமிறங்கி வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களில் நாம் பாதுகாப்பிற்காக வித்தியாசமான பல பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி வருகிறோம். உதாரணமாக பாஸ்வேர்டுகளாக எழுத்துகள், கைரேகைகள், எமோஜ் போன்ற பலவற்றை வைத்து பயன்படுத்தி இருப்போம். அந்த வகையில் அண்மையில், குரலை பாஸ்வேர்டாக பதிவு செய்யும் டெக்னாலஜி வந்துள்ளது.

கனட நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் ஸ்மார்ட்போன்களில் குரலை பதிவு செய்யும் பாஸ்வேர்டு தொழிநுட்ப முறையை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, நம்முடைய குரலை பாஸ்வேர்டுகளாக பதிவு செய்யும்போது, வேறு யாராவது உங்கள் குரலைச் மிமிக்ரி செய்தால், நம்முடைய அனைத்து தரவுகளும் திருடப்படலாம். 60 விநாடிகள் மட்டும் உங்கள் குரலை கணினியில் ஒலிக்கச் செய்தால் போதும், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அப்படியே குரலை உள்வாங்கி உங்கள் குரல் போன்றே பிரதிபலிக்கிறது. சொந்த குரலை போன்று தொழில்நுட்பத்தில் உருவாக்கபடுவது வியப்பானது என்றாலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகளே அதிகம்.

மென்பொருளில் ஒபாமா, ட்ரம்ப் போன்றவர்களின் குரல்களையும் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளனர். இதே போன்று 60 விநாடிகள் மட்டும் உங்கள் குரலை கணினியில் ஒலிக்க செய்து, பின் உங்கள் குரலில் ஒலிக்க செய்ய வேண்டிய சொல்லை டெக்ஸ்ட் பாக்ஸில் டைப் செய்தால் போதும். அதனை நம் சொந்த குரலில் ஒலிப்பது போன்று ஒலித்து காட்டுகிறது. பாதுகாப்பிற்காக வைக்கப்படும் பாஸ்வேர்டுகளே கடைசியில் ஆபத்தாகிவிடுகின்றன இத்தகைய அதிநவீன தொழில்நுட்பங்களால்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com