இந்தியாவில் சந்தா கட்டணத்தை அதிரடியாக குறைத்த நெட்ப்ளிக்ஸ்: கொண்டாடிய நெட்டிசன்கள்
ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சந்தா கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. அதனால் நெட்டிசன்கள் மத்தியில் வைரல் டாக்காக மாறியுள்ளது இந்த ஓடிடி தளம்.
கடந்த 2016 வாக்கில் இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளம் தனது சேவையை அறிமுகம் செய்தது. அப்போது முதல் கட்டணத்தில் ஏதும் மாற்றம் மேற்கொள்ளாமல் இருந்த நெட்ப்ளிக்ஸ் தற்போது அதிரடியாக சந்தா கட்டணத்தை குறைத்துள்ளது.
இந்திய சந்தையில் தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்க செய்யும் நோக்கில் நெட்ப்ளிக்ஸ் இதனை முன்னெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மொபைல் சந்தா 199 ரூபாயிலிருந்து 149 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பேசிக் பிளான் 199 ரூபாய்க்கும் (முன்னதாக 499 ரூபாய்), ஸ்டாண்டர்ட் பிளான் 499 ரூபாய்க்கும் (முன்னதாக 649 ரூபாய்), ப்ரீமியம் பிளான் 649 ரூபாய்க்கும் (முன்னதாக 799 ரூபாய்) குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
“நெட்ப்ளிக்ஸ் தனது சந்தா கட்டணத்தை 60 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. இனி எல்லோருக்கான தளமாக இருக்கும்”, “மற்ற நிறுவனங்கள் எல்லாம் சந்தாவை உயர்த்திக் கொண்டிருக்க ஒரு நிறுவனம் மட்டும் சந்தாவை குறைத்துள்ளது #Netflix”, “நெட்ப்ளிக்ஸ் இந்தியா தனது விலையை குறைத்துள்ள காரணத்தினால் தனது மற்ற நாட்டு தளங்களை இந்தியாவிடமிருந்து தள்ளிவைத்துள்ளது நெட்ப்ளிக்ஸ் தாய் நிறுவனம்”, “நன்றி சொல்ல உனக்கு வாரத்தை இல்லை; எனக்கு #Netflix”, “ஒருவழியா கடைசியில நெட்ப்ளிக்ஸ் தனது விலையை குறைத்துள்ளது” என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டுள்ளனர்.