மனிதர்கள் உயிர் வாழ சாத்தியக்கூறு மிகுந்த துணைக்கோள் இது? NASAவின் புதிய கண்டுபிடிப்பு!

வியாழன் கிரகத்தின் துணைக்கோளான யுரோப்பாவில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.
யூரோப்பா, நாசா
யூரோப்பா, நாசாபுதிய தலைமுறை
Published on

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்தப்படியாக உயிர் வாழ சாத்தியக்கூறு மிகுந்த துணைக்கோளாக யுரோப்பா விளங்குகிறது. 110க்கும் மேற்பட்ட நிலவுகள் வியாழன் கிரகத்தைச் சுற்றி வரும் நிலையில், பூமியை ஒத்த யுரோப்பா எனும் கிரகத்தை விஞ்ஞானிகள் 100 ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்து அதை ஆய்வு செய்து வருகின்றனர். இங்கு நீர் பனிக்கட்டி, பாறைக்கு கீழ் கடல் பரப்பு, உப்பு நீர் உள்ளிட்டவை இருப்பதற்கான ஆதாரத்தை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தாலும் உயிர்கள் வாழத் தேவையான கார்பன் இருக்கிறதா என்பதை இதுவரை உறுதிப்படுத்தாமல் இருந்தது.

தற்போது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக, யுரோப்பாவில் பனிக்கட்டி மேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். தாரா ரெஜியோ என்ற பகுதியில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக உள்ளதாகவும், புவியியல் ரீதியாக இது மிகவும் இளமையான பகுதி எனவும் கூறப்படுகிறது. 1,944 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட யூரோப்பா துணைக்கோளில் 320 மீட்டர் சதுர கிலோமீட்டரில் இது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த வருடம் நாசாவின் கிளிப்பர் விண்கலம் யூரோப்பா துணைக்கோளை ஆய்வு செய்வதற்காக செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com