நாசா விண்வெளிப் பயணத் திட்டம்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் தேர்வு

நாசா விண்வெளிப் பயணத் திட்டம்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் தேர்வு
நாசா விண்வெளிப் பயணத் திட்டம்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் தேர்வு
Published on

நாசாவின் விண்வெளிப் பயணத் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பத்து பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் இடம் பெற்றுள்ளார்.

நிலவு, செவ்வாய் கிரகம், சர்வதேச விண்வெளி நிலையம் ஆகியவற்றுக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக விண்வெளி வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளுக்காக 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிலிருந்து 4 பெண்கள் உள்ளிட்ட பத்து பேர் தேர்வாகியுள்ளனர்.

இந்த பத்து பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 45 வயதான அனில் மேனனும் ஒருவர். இவர், அமெரிக்க விமானப்படையில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருகிறார். ஹவார்வர்டு பல்கலைக்கழகத்தில் நியூரோபயாலஜியில் இளங்கலைப் பட்டமும், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் முதுகலைப் பட்டமும் பெற்றவர் அனில் மேனன். நாசாவின் முந்தைய விண்வெளி ஆய்வுகளிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com