ஏலியன்ஸ் இருப்பதற்கான முதல் கட்ட ஆதாரங்கள்... வெளியிட்டது நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்!

ஏலியன்ஸ் இருப்பதற்கான முதல் கட்ட ஆதாரங்கள்... வெளியிட்டது நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்!
ஏலியன்ஸ் இருப்பதற்கான முதல் கட்ட ஆதாரங்கள்... வெளியிட்டது நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்!
Published on

சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதற்கான தெளிவான ஆதாரத்தை ஜேம்ஸ் டெலஸ்கோப் கண்டறிந்துள்ளது. வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான முதல் கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் அனுப்பப்பட்ட நிலையில், ஜூலை 12ஆம் தேதி முதல் வண்ணப் புகைப்படத்தை வெளியிட்டது. பேரண்டத்தின் வெவ்வேறு வகையான விண்மீன் கூட்டங்கள், தூசு மண்டலங்கள், கோள்கள் போன்றவற்றின் 7 புகைப்படங்களை வெளியிட்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள WASP-39 B என்கிற கிரகத்தின் வளிமண்டலத்தில், கார்பன் டை ஆக்சைடு பற்றிய முதல் தெளிவான ஆதாரத்தை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் படம் எடுத்துள்ளது. நமது சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கிரகத்தை விட 1.3 மடங்கு பெரிதான இந்த வாயு கிரகம் விண்மீனுக்கு அருகே உள்ள கிரகம் என கூறப்படுகிறது.

கார்பன் டை ஆக்சைடு இருப்பதால், அங்கும் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவியலாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி இருந்தால், அவர்கள் வேற்றுகிரகவாசிகளாக அறியப்படக்கூடும். இருப்பினும் இதுகுறித்து ஜேம்ஸ் வெப் குழுவினர் எவ்வித அதிகாரபூர்வ நிலைபாடும் தெரிவிக்கவில்லை. இப்போதைக்கு, கார்பன் டை ஆக்சைடு இருப்பது மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com