பூமியை போன்ற 7 கிரகங்கள் கண்டுபிடிப்பு

பூமியை போன்ற 7 கிரகங்கள் கண்டுபிடிப்பு

பூமியை போன்ற 7 கிரகங்கள் கண்டுபிடிப்பு
Published on

உயிர்கள் வாழ தகுதிபடைத்த 7 புதிய கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட பூமியின் அளவிலான இந்த கிரகங்கள் பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தொலைவிலுள்ள நட்சத்திரத்தை சுற்றி வருவதை நாசாவின் ஸ்பைட்செர் தொலைநோக்கி மூலம் கண்டறிந்துள்ளனர். அந்த நட்சத்திரக் குடும்பத்துக்கு ட்ராப்பிஸ்ட் - 1 (TRAPPIST-1) என நாசா பெயரிட்டுள்ளது. இந்த கிரகங்களின் பரப்பில் தண்னீர் இருப்பதற்கு சாத்தியக்கூறு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதனால் அங்கு உயிரினங்கள் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனினும் அந்த கிரகங்களில் நிலவும் சுற்றுச்சூழலை ஆய்வு செய்த பின்னரே அங்கு உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை தெரிவிக்கமுடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த கிரகங்களில் உயிரினங்களுக்குதேவையான் மீத்தேன், தண்ணீர், ஓசோன் உள்ளிட்ட ரசாயனங்கள் இருக்கிறதா என ஆய்வு நடத்த சில ஆண்டுகள் ஆகலாம் என தெரிகிறது. பூமியைப் போன்றே பாறைகளும் இந்த கிரகங்களில் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 7 கிரகங்களிலும் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 3 கிரகங்களில் உயிர்கள் வாழ அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com