8 வருடத்துக்குப் பின் சந்திராயன் 1-ஐ கண்டுபிடித்த நாசா!

8 வருடத்துக்குப் பின் சந்திராயன் 1-ஐ கண்டுபிடித்த நாசா!
8 வருடத்துக்குப் பின் சந்திராயன் 1-ஐ கண்டுபிடித்த நாசா!
Published on

இந்தியாவின் முதல் நிலவு செயற்கைக்கோளான சந்திராயன்1, கடந்த 2008-ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பபட்டது. இந்தச் செயற்கைக்கோள் 8 ஆண்டுகளுக்கு பின்னும் நிலவைச் சுற்றி வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் சந்திராயன் 1 செயற்கைக்கோளை, 2008-ஆம் ஆண்டு இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அதன்பின் சந்திராயன் 1 செயற்கைக்கோள் அனுப்பட்ட பின் ஓராண்டு காலமாக நிலவைப் பற்றிய பல தகவல்களை கண்டறிந்து, இஸ்ரோவிற்கு அனுப்பியது. அதன்பின் 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியுடன் சந்திராயன் 1-இன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சந்திராயன் 1 தொலைந்துவிட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.

இந்நிலையில் இஸ்ரோ, தொலைந்துவிட்டதாகக் கூறிவரும் சந்திராயன் 1 செயற்கைக்கோள் இன்னமும் நிலவைச் சுற்றி வந்துகொண்டிருப்பதாகவும், அது தொலையவில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தற்போது தெரிவித்துள்ளது. அதன் வாழ்நாள் முடிந்துவிட்ட நிலையில், சந்திராயன் 1 ஒரு விண்வெளி குப்பையை போல, நிலவைச் சுற்றிவந்து கொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டில் சந்திராயன்-2 செயற்கைக் கோளை இஸ்ரோ ஏவ உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com