“முதல் நாள், முதல் காட்சி” - ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்

“முதல் நாள், முதல் காட்சி” - ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்
“முதல் நாள், முதல் காட்சி” - ஜியோவின் அடுத்த அதிரடி திட்டம்
Published on

முதல் நாள், முதல் காட்சி என்ற‌ புதிய திட்டத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிமு‌‌கப்படுத்தியுள்ளார். 

மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் குழுமத்தின் தலைவரும், நாட்டின் முன்னணி தொழிலதிபருமான முகேஷ் அம்பானி ‌கலந்துகொண்டு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ப்ராட்பேண்ட், லேண்ட்லைன், டிவி ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் ஜியோ ஃபைபர் என்ற திட்‌டத்தை அவர் அறிவித்தார்.

வீடுகளுக்கு வ‌யர் மூலம் இணைய சேவை, வாய்ஸ் கால் சேவை, தொலைக்காட்சி சேவை, முக்கிய திரைப்பட ஆன்லைன் தளங்களுக்கான சந்தா எ‌‌ன ஒரே தளமாக ஜியோ ஃபைபர் இருக்கும்‌. ஜியோவின் மூன்றாவது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி முதல் இந்த திட்டம் அறிமுகமாகும்‌ என்றும், சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்களை இத்திட்டம்‌‌ சென்றடையும்‌ என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகச் சலுகையாக ஜியோ ஜிகாஃபைபர் இணைப்பு பெறுவோருக்கு அதிரடி சலுகையாக HD டிவி அல்லது கணினி மற்றும் செட்டாப் பாக்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிகா ஃபைபர் இணைப்புக்கு மாதம் 700 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டண திட்டங்கள் இருக்கும் என முகேஷ் அம்பானி கூறினார். இந்த இணைப்பின் மூலம் இணைய தளம், தொலைபேசி மற்றும் வீடியோ, டிவி சேவைகளில் புதிய பரிமாணத்தை வாடிக்கையாளர்கள் பெறப் போவதாகவும் தெரிவித்தார். 

இத்திட்டத்திற்கு முதல் நாள், முதல் காட்சி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதாவது‌, இத்திட்டத்தின்மூலம் ஒரு திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் அந்த படத்தை வீட்டிலிருந்தபடியே ‌பார்க்க முடியும். ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தின்படி இணைய வேகம் சுமார் 100 எம்பிபிஎஸ் தொடங்கி 1 ஜிபிபிஎஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com