அட்டகாசமான அம்சங்களுடன் மோட்டோ எக்ஸ் 4

அட்டகாசமான அம்சங்களுடன் மோட்டோ எக்ஸ் 4
அட்டகாசமான அம்சங்களுடன் மோட்டோ எக்ஸ் 4
Published on

நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக மொபைல் தயாரிப்பில் தனக்கென ஒரு முத்திரை பதித்து கொடிகட்டிப் பறந்த நிறுவனம் மோட்டோரோலா. தற்போது இந்நிறுவனம் மோட்டோ எக்ஸ் 4 என்ற ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்: எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் இரட்டை கேமராவுடன் இரண்டு சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் வடிவமைக்கபட்டதே இதன் ஹைலைட். இந்த ஸ்மார்ட்போனானது 5.2 அங்குல அளவு, 1920 x 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட முழு ஹெச்டி தொடுதிரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மோட்டோ எக்ஸ் 4 ஆண்ட்ராய்டு 7.1 நவுக்கட் இயங்குதளத்தில் இயங்குகிறது. குவால்கம் ஸ்னாப்டிராகன் 630 பிராசசர், 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ், 3000 எம்.ஏ.ஹெச் பேட்டரி திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், செல்ஃபி பிரியர்களுக்காக 16 மெகா பிக்சல்களை உடைய முன்புற கேமரா, பின்புறத்தில் 12 மெகா பிக்சல்கள் மற்றும் மற்றொரு 8 மெகா பிக்சல் உடைய கேமரா வசதியுடன், கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com