பக்கா பட்ஜெட் மொபைலாக விற்பனைக்கு வந்த மோடோ ஜி42! டாப் 5 சிறப்பம்சங்கள் இதோ!

பக்கா பட்ஜெட் மொபைலாக விற்பனைக்கு வந்த மோடோ ஜி42! டாப் 5 சிறப்பம்சங்கள் இதோ!
பக்கா பட்ஜெட் மொபைலாக விற்பனைக்கு வந்த மோடோ ஜி42! டாப் 5 சிறப்பம்சங்கள் இதோ!
Published on

மோட்ரோலா நிறுவனத்தில் இருந்து பட்ஜெட் மொபைலாக இன்று விற்பனைக்கு வந்திருக்கிறது மோடோ ஜி42. வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் குரோம் போன்ற பயன்பாடுகளை இயக்குவதற்கு, மிதமான செயலாக்கத் தேவைகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக இந்த ஃபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் டாப் 5 சிறப்பம்சங்கள் இதோ!

1.பட்ஜெட் வரம்பை தாண்டிய வசதிகள்:

பட்ஜெட் சாதனமாக இருக்கும்போதிலும், தூசி மற்றும் நீர் தெறிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக IP52 மதிப்பீட்டைக் கொண்ட பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது முழு HD+ தெளிவுத்திறன் மற்றும் நிலையான 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.4-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

2. கேமரா எப்படி?

பின்புற கேமரா அமைப்பில் f/1.8 துளை கொண்ட 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கும். மோட்ரோலா 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் ஆழமான சென்சாராக இரட்டிப்பாகிறது என்று தெரிவித்துள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

3. பேட்டரி எவ்வளவு?

மோடோ ஜி42 மொபைலானது 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. சார்ஜ் செய்வதற்கான USB Type-C போர்ட் ஆகியவை மொபைலுடன் வழங்கப்படும். இந்த மொபைல் Qualcomm Snapdragon 680 SoC மூலம் இயங்குகிறது. சேமிப்பகத்தை 1TB வரை விரிவாக்கிக் கொள்ளலாம்.

4. சிறப்பம்சங்கள்:

மோடோ ஜி42 இரண்டு வண்ண வகைகளைக் கொண்டுள்ளது. அது மெட்டாலிக் ரோஸ் மற்றும் அட்லாண்டிக் கிரீன் ஆகும். மோடோ ஜி42 மொபைலில் 5G இணைப்பு வழங்கப்படவில்லை. 4G-ஐ மட்டுமே ஆதரிக்கிறது.

5. விலை எவ்வளவு?

இந்தியாவில் மோடோ ஜி42 விலை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பக மாடலுக்கு ரூ.13,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு வங்கி சலுகையாக ரூ.1,000 தள்ளுபடியை வழங்குகிறது. இதன் மூலம் இதன் விலை ரூ.12,999 ஆக விற்பனை செய்யப்படும். ஆனால் இந்த தள்ளுபடி துவக்க சலுகை மட்டுமே! பழைய ஸ்மார்ட்போன்களில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் வழங்கப்படும் என பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

அதிக இன்டர்னல் ஸ்டோரேஜ் (128ஜிபி) மற்றும் ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மோடோ ஜி52 -ஐ இந்தியாவில் ரூ.16,499 விலைக்கு வாங்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com