மோட்டோ அடுத்த மாதம் இரண்டு மாடல் போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்திய சந்தையில் தனக்கென ரசிகர் வட்டத்தை வைத்துள்ள மோட்டோ அடுத்த மாதம் இரண்டு மாடல் போன்களை வெளியிட உள்ளது. Moto G30 மற்றும் Moto G10 ஆகிய மாடல்கள் மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் களம் இறங்குகின்றன. இந்த இரண்டு மாடல்களும் ஈரோப்பாவில் இந்த மாதம் வெளியானது. அதே மாடல்கள் இந்தியாவிலும் வெளியாகவுள்ளதால் இந்திய ரசிகர்களை மோட்டோ கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Moto G30:
6.50-inch டிஸ்பிளே, 13மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 64 +8+2+2 ஆகிய 4 பின்பக்க கேமராக்கள், 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், Android 11ஐ கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி கெபாசிட்டி என்பதால் நீண்ட நேரம் சார்ஜ் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. Qualcomm Snapdragon 662 ப்ராசெஸ்சர், 720x1600 pixels ரெசொலேஷன் கொண்டுள்ளது இந்த மாடல். Moto G30 மாடல் இந்திய சந்தையில் ரூ.15900க்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Motorola Moto G10:
இந்த மாடலுக்கும், Moto G30க்கும் ப்ராசெஸர், ஸ்டோரேஜ் ஆகியவை வித்தியாசப்படுகின்றன. அதற்கு ஏற்ப விலையிலும் மாற்றம் உள்ளது. Motorola Moto G10 விலையானது இந்திய சந்தையில் ரூ.13300ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.50-inch டிஸ்பிளே, 13மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 64 +8+2+2 ஆகிய 4 பின்பக்க கேமராக்கள், 4ஜிபி ரேம்,64ஜிபி ஸ்டோரேஜ், Android 11ஐ கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி கெபாசிட்டி. Qualcomm Snapdragon 460 ப்ராசெஸ்சர், 720x1600 pixels ரெசொலேஷன் கொண்டுள்ளது இந்த மாடல்.