வாரத்தில் 45 மணி நேரம் வேலை செய்யும் பெண்கள் : அச்சுறுத்தும் உண்மைகள் !

வாரத்தில் 45 மணி நேரம் வேலை செய்யும் பெண்கள் : அச்சுறுத்தும் உண்மைகள் !
வாரத்தில் 45 மணி நேரம் வேலை செய்யும் பெண்கள் : அச்சுறுத்தும் உண்மைகள் !
Published on

வாரத்திற்கு 45 மணிநேரத்திற்கு மேலாக வேலை செய்யும் பெண்களுக்கு நீரிழிவு ஆபத்து இருப்பதாக ஆய்வு விவரம் ஒன்று எச்சரித்துள்ளது. 

உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய வாழ்வியல் சிக்கலாக நீரிழிவு நோய் உருவாகி வருகிறது. 2015ஆம் ஆண்டில் மட்டும் உலக அளவில் நீரிழிவு நோயால் ரூ.95 லட்சம் கோடி செலவாகியுள்ளது என்பதே அதன் தாக்கத்தை உணர்த்தும். இந்நிலையில்தான் கனடாவின் செயின்ட் மைக்கேல் மருத்துவமனை மற்றும் டொரன்டோ பல்கலைக்கழகம் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டது. 35 வயதில் உள்ள 7 ஆயிரத்து 65 பேரிடம் அவர்களின் மருத்துவ அறிக்கைகளின்படி ஆய்வு செய்யப்பட்டது.

இதில் வாரத்திற்கு 15 முதல் 34 மணிநேரம் வேலைசெய்வோர், 35 முதல் 40 மணிநேரம், 41 முதல் 44 மணிநேரம் வரை மற்றும் 45 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலை செய்வோராக பிரித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் கனடாவின் பிஎம்ஜெ நீரிழிவு ஆராய்ச்சி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன. ‌பாலினம், மணமானவர்களா? இல்லையா? பிறந்த இடம், வாழ்விடம், நீண்டகால நோய், வாழ்க்கை முறை, வேலைநேரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வில், ஒருவாரத்திற்கு 45 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் பெண்களுக்கு நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக‌ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வேலை செய்யும்போது ஹார்மோன் சீரற்று, இன்சுலின் குறைபாடு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாதிப்புகள் அதி‌கரிப்பதை கருத்தில் கொண்டு, நீண்ட வேலைநேரம் பற்றி பற்றிய கொள்கை முடிவுகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com