அறிவியல் வரலாற்றில் முதல்முறையாக நிலாவில் மொபைல் நெட்வார்க் வசதி ஏற்படுத்தப்ட உள்ளது.
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதுவும் மொபைல் தொலைத்தொடர்புத் துறையில் அசூர வளர்ச்சி. கடந்த 10 வருடங்களில் பட்டி தொட்டி எங்கும் செல்போன்கள் ஆதிக்கம் இருக்கு. அதிலும் 2ஜி, 3ஜி, 4ஜி வந்தாச்சு.. இனி அடுத்தது என்ன என யோசிக்கிறீங்களா...? அறிவியல் வரலாற்றில் முதல்முறையாக நிலாவில் மொபைல் நெட்வார்க் வசதி விரைவில் அமைய உள்ளது.
வோடபோன், நோக்கியா, ஆடி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளன. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக, நிலவின் மேற்பரப்பை பூமியில் இருப்பவர்கள் கண்டுகளிக்க வசதியாக அதனை உயர்தர பிக்சலில் லைவ்வாகவும் காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பொதுவாக விண்வெளி திட்டங்களையெல்லாம் இதுவரை அரசுத் துறை சேர்ந்த துறைகளே செயல்படுத்தி வந்த நிலையில் தற்போது முதல்முறையாக தனியார் நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஒருகிலோவுக்கும் குறைவான எடையில் ஹார்டுவேர் ஒன்றை நோக்கியா நிறுவனம் தயாரித்துத் தரவுள்ளது.
பெர்லினை சேர்ந்த பிடி அறிவியலாளர்கள் குழுவுடன் இணைந்து இந்தத் திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. 2019ல் ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் திட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் வோடபோன் கூறியுள்ளது.