மைரோ சாப்ட் நிறுவனத்தின் பிரபல வீடியோ சாட்டிங் தளமான ஸ்கைப் அப்டேட் ஆகியுள்ளதால் அடுத்த மாதம் முதல் இயங்காது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது ஐஎம்ஓ, வாட்ஸ்அப் வீடியோ கால், பேஸ்புக் வீடியோ கால் என பல வீடியோ சாட்டிங் வசதிகள் வந்த போதிலும் முதன் முதலாக வீடியோ சாட்டிங்கிற்கு புகழ்பெற்றது ஸ்கைப் தான். குரூப் காலிங், மெசெஜ் சாட்டிங் என பல அம்சங்கள் கொண்ட ஸ்கைப், அதன் வெர்ஷனை மார்ச் மாதம் முதல் மேம்பட்ட பதிப்பில் வழங்க உள்ளதால் பழைய வெர்ஷன் இயங்காது என மைரோ சாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட பதிப்பில் மட்டுமே இனி இயங்கும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.