கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயிண்ட் கிராபிக்ஸ் செயலிக்கு மூடுவிழா நடத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்டோஸ் 10 இயங்குதளத்தின் கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் பெயிண்ட் கிராபிக்ஸ் செயலி இடம்பெறவில்லை. இது பெயிண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெயிண்ட் பிரஷ் என்ற பெயரில் கடந்த 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெயிண்ட் செயலி படங்கள் வரைவதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பெயிண்ட்டுக்குப் பதிலாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு முப்பரிமாண படங்களையும் வரையப் பயன்படும் வகையில் பெயிண்ட் 3டி எனும் புதிய வெர்ஷனை வெளியிட்டது. பெயிண்ட்டுக்குப் பதிலாக விண்டோஸ் 10 இயங்குதளத்தின் புதிய அப்டேட்டில் பெயிண்ட் 3டி இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்க்ரீன் சேவர் ஆப்ஷன் மற்றும் ரீடர் ஆப் ஆகிய வசதிகளும் புதிதாக வெளியிடப்பட உள்ள விண்டோஸ் 10 அப்டேட்டில் இடம்பெறாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.