ரயில் விபத்தை தவிர்க்க புதிய சென்சார் கருவி.. மதுரை பொறியியல் மாணவர்கள் கண்டுபிடுப்பு!

மதுரையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஜெயவிஷ்ணு, ரயில் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக சென்சார் மூலம் இயங்கும் புதிய கருவியை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்-மீனாட்சி தம்பதியினரின் மகன் ஜெயவிஷ்ணு பொறியியல் பிரிவில் EEE இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் பள்ளிப் பருவத்தில் இருந்து புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி உள்ளிட்ட அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றுள்ளார்.

ரயில் விபத்தை தவிர்க்க புதிய சென்சார் கருவி..

ஜெயவிஷ்ணு சிறுவயதில் இருந்தே ரயில்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டு ப்ராஜெக்ட்டுக்காக ஜெயவிஷ்ணு, அவரது நண்பர் கார்த்திக் ராஜா ஆகியோர் சேர்ந்து ரயில் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக புதிய சென்சார் கருவி ஒன்றை தயாரித்துள்ளனர்.

ரயில்வே பாய்ண்ட் மிஷின் ஸ்டேட்டஸ் சர்வீஸ் சிஸ்டம் (RPM SSS) என்ற புதிய சென்சார் கருவி மூலம் விபத்து நடக்கப் போவதை மூன்று கிலோ மீட்டருக்கு முன்னதாகவே அறிந்து தவிர்த்து விடலாம் எனக் கூறுகின்றனர். புதிய கருவியை ஒவ்வொரு ரயில் சிக்னலிலும் நிறுவுவதற்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த கருவியின் விவரங்களை ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் ஜெயவிஷ்ணு கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com