செவ்வாயில் மிகப்பெரிய ஏரி இருப்பதற்கான ஆதாரங்களை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அங்கு உயிர்கள்
வாழ்வதற்கான சாத்தியக்கூறு அதிகரித்திருக்கிறது. செவ்வாயின் தென் துருவத்தில் உள்ள பனிப்படலத்துக்குக் கீழே நீர் ஏரி இருப்பதாகத்
தெரியவந்திருக்கிறது. இது சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்துக்கு பரந்து விரிந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய செயற்கைக்கோள் இந்த இந்த ஏரியைக் கண்டுபிடித்திருக்கிறது. இது குறைந்தது ஒரு
மீட்டர் ஆழம் கொண்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. செவ்வாயின் மேற்பரப்பில் கதிர்வீச்சு அதிகம் இருப்பதால், அங்கு
உயிர்வாழ்க்கை சாத்தியமில்லை என்று ஆய்வாளர்கள் ஏற்கெனவே முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
எனினும் தரைக்குக் கீழே உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதே ஆய்வாளர்களின் தற்போதையத் தேடலாக உள்ளது.
அதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.