லாவா செல்போன் நிறுவனம் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கண்டறியும் வசதிகளுடன் செல்போனை அறிமுகம் செய்துள்ளது
இது குறித்து தெரிவித்துள்ள லாவா பல்ஸ், உலகிலேயே இந்த இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கண்டறியும் வசதிகளுடன் வந்துள்ள முதல் போன் இது தான். போனில் காட்டும் அளவானது மருத்துவ உபகரணங்களை போல துல்லியமானதாக இருக்குமென தெரிவித்துள்ளது.
‘pulse scanner’ ல் பயனாளர்கள் தங்கள் விரலின் முனையை வைத்து அழுத்தினால் போதும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கணக்கிடப்படும் என்றும், இந்த தகவல்களை சேகரித்து வைக்கவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1599க்கு அமேசான், பிளிப்கார்ட் இணையதளங்களில் இந்த போன் விற்பனையில் உள்ளது.2.4 இன்ச் டிஸ்பிளே, பிரைமரி கேமரா, வீடியோ எடுக்கும் வசதி, 1800mAh பேட்டரி, ஆட்டோக்லால் ரெக்கார்டிங் வசதி, வைர்லஸ் எஃப் எம், 32ஜிபி மெமரி என பல வசதிகள் உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தார் 6 நாட்கள் வரை பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.