பிஎஸ்எல்வி ராக்கெட் கடந்த மாதம், விண்ணில் ஏவப்பட்டு தோல்வியில் முடிவடைந்த நிலையில், நவம்பர் அல்லது டிசம்பரில் மீண்டும் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஐஆர்என்எஸ்எஸ்-1 எச் என்ற செயற்கைக்கோள் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் அடுத்த திட்டம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்எல்வி - சி 39 இல் நடந்த தவறுகள் இதில் இருக்காது என கூறிய அவர், அனுப்பிய ராக்கெட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. செயற்கைக்கோள் தனியாக பிரிவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே ஐஆர்என்எஸ்எஸ்-1 எச் தோல்விக்கு காரணம் எனத் தெரிவித்தார்.