கியா சோனட் காருக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்

கியா சோனட் காருக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்
கியா சோனட் காருக்கான முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்
Published on

அடுத்த மாதம் வெளியாகவுள்ள கியா சோனட் காருக்கான முன்பதிவு இன்று முதல் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளதாக அறிவித்துள்ளது கியா மோட்டார்ஸ் இந்தியா. 

வாடிக்கையாளர்கள் கியா நிறுவனத்தின் இணையதள பக்கம் மூலமாகவும், இந்தியாவில் உள்ள கியா டீலர் ஷோரூமிலும் 25000 ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கியா செல்டோஸ் மற்றும் கார்னிவல் மாடலை தொடர்ந்து சோனட் மாடல் அறிமுகமாக உள்ளது. எச்.டி லைன் மற்றும் ஜி.டி லைன் என இரண்டு பாடி லைன்களில் சோனட் சந்தைக்கு வர உள்ளது. 

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் ஃபைவ் ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் சிக்ஸ் ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிக்ஸ் ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சினில் சிக்ஸ் ஸ்பீட் ஐஎம்டி மற்றும் செவன் ஸ்பீட் டிசிடி யூனிட்டுடன் பொருத்தப்படும்.

எல்.ஈ.டி விளக்குகள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட் ஃபங்க்ஷன், யு.வி.ஓ இணைப்புடன் 10.25 இன்ச் எச்டி டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, ஏழு ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம் மாதிரியான அம்சங்கள் சோனட்டில் இடம் பெற்றுள்ளது. 

ஆறு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ஈபிடி, ஈஎஸ்சி, விஎஸ்எம், பிரேக் அசிஸ்ட் மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மாதிரியான பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. 11 வண்ணங்களில் சோனட்  இந்திய சாலைகளை வலம் வர உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com