மின் வாகனங்கள் நிறைந்த நகரமாக மாறுகிறதா குஜராத் மாநிலத்தின் கெவாடியா

மின் வாகனங்கள் நிறைந்த நகரமாக மாறுகிறதா குஜராத் மாநிலத்தின் கெவாடியா
மின் வாகனங்கள் நிறைந்த நகரமாக மாறுகிறதா குஜராத் மாநிலத்தின் கெவாடியா
Published on

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மாதிரியான எரிபொருளின் விலை ஏறுமுகத்தில் இருந்து வரும் நிலையில், மின் வாகன பயன்பாட்டை நாட்டில் அதிகரிப்பதன் மூலம் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது, புவி வெப்பமயமாதலை தடுத்தல் மாதிரியான பணிகளை முன் எடுத்துள்ளது மத்திய அரசு.

இந்நிலையில் குஜராத் மாநிலம் கெவாடியா நகரத்தை மின் வாகனங்கள் நிறைந்த நகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளதாக பிரதமர் மோடி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தெரிவித்துள்ளார். அதற்கு கட்டமைப்புகள் இந்த நகரில் அமைக்கப்படும் என்றும். அதன் மூலம் பேட்டரி உதவியுடன் இயங்கக் கூடிய பேருந்துகள், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சோலார் நகர திட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. 

நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கெவாடியா நகரில்தான் ஒற்றுமைக்கான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com