''இது ஸூம் ஆப் காப்பியா?''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்!

''இது ஸூம் ஆப் காப்பியா?''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்!
''இது ஸூம் ஆப் காப்பியா?''. - இணையத்தில் கிண்டலுக்குள்ளான ஜியோ மீட்!
Published on

ஜியோ மீட் ஆப் வெளியிடப்பட்டதில் இருந்தே இணையத்தில் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியுள்ளது

ஜியோ நிறுவனத்தின் மூலம் மீண்டும் ஆசியாவில் முதல் பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி. அத்துடன் உலகின் பணக்காரர்கள் பட்டியலிலும் 9வது
இடத்திற்கு முன்னேறினார். ஜியோவின் பங்குகளை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளைக் கொடுத்து வாங்கியதே
இதற்குக் காரணம்.அதிலிருந்து ஜியோ நிறுவனத்தின் அடுத்தடுத்த அதிரடிகள் தொடங்கியுள்ளன. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய ஆன்லைன்
நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜியோமார்ட் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் ஸூம், கூகுள் மீட் ஆகிய செயலிகளுக்குப் போட்டியாக ஜியோ மீட் எனும் புதிய வீடியோ காலிங் செயலியை ரிலையன்ஸ்
நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் அன்லிமிடெட் ஹெச்டி வீடியோ கால்ஸ் பேச முடியும் என்றும், இந்தியாவில் இந்தியர்களுக்காக
இது உருவாக்கப்பட்டது என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் அப் ஸ்டோரில் இதைப் பதிவிறக்கம்
செய்ய முடியும் எனப்பட்டுள்ளது.

ஜியோ மீட் ஆப் வெளியிடப்பட்டதில் இருந்தே இணையத்தில் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. அச்சு அசலாக ஸூம் ஆப் போலவே
ஜியோ இருப்பதால் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. ஜியோ மீட் செயலியின் வடிவமைப்பு, ஐகான்கள் என அனைத்தும் அப்படியே
ஸூம் செயலியை போலவே இருப்பதால் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

'முடிந்தால் 5 வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்' என்றும், 'இது தேர்வில் பார்த்து எழுதியவரின் விடைத்தாள்' என்றும் மீம்கள் பறக்கின்றன. அதேவேளையில் தொட்டதை எல்லாம் வெற்றியாக்கும் ஜியோ நிறுவனம், அடுத்தடுத்த அப்டேட்டுகள் மூலம் ஜியோ மீட் செயலியை
முதலிடத்திற்கு கொண்டு வந்துவிடும் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com