தங்களுடன் இணைப்பில் இருங்கள் என்று ஜியோ கேட்டுக்கொண்டுள்ளது.
ஜியோ அழைப்புகள் அடிக்கடி இயங்காமல் இருக்கும், பின்னர் சிறிது நேரத்தில் தானாகவே இயங்கும் என்பது வாடிக்கையாளர்களின் பரவலான கருத்தாக உள்ளது. இருப்பினும் இன்று மதியத்திற்கு மேல் தடையான ஜியோ அழைப்புகள் இதுவரை மீண்டும் இயங்கவில்லை என்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏர்செல் நெட்வோர்க் டவர் நிறுவனங்களுடனான பிரச்னையில் முடங்கியுள்ள நிலையில், தற்போது ஜியோ அழைப்புகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவ, வாடிக்கையாளர் ஒருவரின் ட்விட்டுக்கு ஜியோவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதில், “எங்களது நெட்வொர்க்கில் சில இடங்களில் பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளது. பிரச்னைகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் அவை சரிசெய்யப்படும். அதுவரை எங்களுடன் தொடர்பில் இருங்கள்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.