ரிலையன்ஸ் ஜியோ பிரைம் கட்டண சலுகைகளுக்கான முன்பதிவு, இன்று முதல் துவங்கியுள்ளது. இந்தச் சேவையை பயன்படுத்திக்கொள்ள ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் ஆக வேண்டும். இதற்காக ஒருமுறை கட்டணமாக ரூ.99 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தனது இலவச சேவையை தொடங்கியது. முதலில் டிசம்பர் வரை இலவசம் என அறிவித்த சேவைகள், பின்பு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மாதத்துடன் முடிவடையும் ஜியோ இலவச சேவையை, ஜியோ வாடிக்கையாளர்கள் தொடர்ந்து சலுகை விலையில் பெற, ப்ரைம் மெம்பர்ஷிப் எனும் திட்டத்தில் இணைய வேண்டும். இதற்காக ரூ. 99 க்கு ரீசார்ஜ் செய்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் ஆக்டிவேட் செய்தால், ஜியோ இலவச சேவை முடிந்தவுடன் சலுகை விலையில் டேட்டா, ப்ரீ கால்ஸ், மெசேஜ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதன்படி, தற்போது கட்டண சலுகை அட்டவணையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 149, ரூ. 303, ரூ. 499, ரூ. 999, ரூ. 1999, ரூ. 4999, ரூ. 9999 போன்ற பல சலுகை விலை பட்டியலை ஜியோ வெளியிட்டுள்ளது.