நிலவின் புகைப்படத்தை அனுப்பியுள்ள சந்திரயான் 2 ஆர்பிட்டர்..!

நிலவின் புகைப்படத்தை அனுப்பியுள்ள சந்திரயான் 2 ஆர்பிட்டர்..!
நிலவின் புகைப்படத்தை அனுப்பியுள்ள சந்திரயான் 2 ஆர்பிட்டர்..!
Published on

நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 

மேலும், Infrared Spectrometer கருவி மூலமான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு செயலிழந்த போதிலும், ஆர்பிட்டர் தொடர்ந்து வெற்றிகரமாக நிலவைச்சுற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆர்பிட்டரில் உள்ள 8 கருவிகளில், இதுவரை டி.எம்.சி-2 , XMS, OHRC ஆகிய கருவிகள் மூலமாகவே தகவல்கள் பெறப்பட்டு வந்தன. 

தற்போது முதன்முறையாக IIRS எனப்படும் Infrared Spectrometer கருவி மூலம் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்தக் கருவி நிலவின் மேற்பரப்பின் மீது பட்டு எதிரொலிக்கும் சூரிய ஒளிக்கதிரை அளவீடு செய்து , அங்கு இடம்பெற்றிருக்கும் தனிமங்களை அளவீடு செய்ய உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com