டெக்
நிலவில் மேடு, பள்ளங்களை கடந்து பாதுகாப்பாக 100மீ வரை சென்ற ரோவர்! இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அப்டேட்
நிலவில் உள்ள சந்திரயானின் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவில் உள்ள சந்திரயானின் லேண்டர் மற்றும் ரோவரின் அப்டேட்டை இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் வெளியிட்டு இருக்கிறார். லேண்டரில் இருந்து ரோவர் 8 முதல் 10 மீட்டர் வரை பயணம் செய்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது 100 மீட்டர் அளவிற்கு அதன் தூரம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அது பள்ளங்களையும் மேடுகளையும் கடந்து பாதுகாப்பாக சென்றுக்கொண்டிருப்பதாகவும், கூறி ரோவர் பயணித்த இடத்தை வரைபடத்தின் மூலம் அளவிட்டு அதன் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிடப்பட்டுள்ளது